ஞாயிறு, 23 ஜனவரி, 2011

எட்டுத்தொகை

       எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நுால்களைப் பகுக்கின்றனர்.


எட்டுத்தொகை நூல்களாவன:


நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை.



  1. ஐங்குறுநூறு
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. கலித்தொகை
  5. குறுந்தொகை
  6. நற்றிணை
  7. பரிபாடல்
  8. பதிற்றுப்பத்து

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள்,
  • அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
  • புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது பரிபாடல். அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.
பரிபாடல் கடவுள் பற்றிய பாடல்களாகவும், பாடல்கள் பெரிதும் தனிப்பாடல்கள், ஆசரியப்பாவாலியன்றவை. பரிபாடலும் கலித்தொகையின் கலிப்பாவும் தவிர்த்துப் புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள் சிலவுள்ளன. இடத்திற்கேற்ப தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனா். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கென்றும் இன்றியமமையாத அறங்களையும், ஒழுக்கங்களையுமே வற்புறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர்.
கிடைத்த பாடல்களில் அகத்திற்கு நானுாறு என்பற்கேற்ப புறத்திற்கும் நானுாறு பாடல்களைத் தொகுத்தனர். குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நுாறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். ஐங்குறுநுாற்றுள் பாலைக்கும் ஒரு நுாறு கொண்டனர். பிற்காலத்தார் நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடலகளின் அடியளவுகளைக் கொண்டு பல தொகை நுால்களைத் தொகுத்துள்ளனர். மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையுமுடைய பாடல்களை ஐங்குறுநுாறாக்கினர். ஐந்து புலவர்கள் நுாறுநுாறாகத் தொகுத்ததே பாடிய தனித்தன்மையையும் உடையது இத்தொகை நுால். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற சேரன் ஆதரவால் கூடலுார்க்கிழார் இதனைத் தொகுத்தார். 4-8 அடியெல்லையினையுடைய பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன. 13-31அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானுாறாயின. புறநானுாறும், பதிற்றுப் பத்தும் புறத்தை பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நுால்களின் பாடல்களை அறம் பொருள் இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன.
அகப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், புறப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் செய்யப்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானுாற்றிலும் அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளேஇவை. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பம் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர். அக்காலத்தாண்ட சேர சோழ பாண்டியர் சிற்றரசர்கள் குறுநில மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள் புறநானுாற்றில் மிகுதியாகவும் அகநுால்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.


    தொகைநூல்தொகுத்தவர்தொகுப்பித்தவர்குறிப்பு
    அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை)மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன்பாண்டியன் உக்கிரப் பெருவழுதிபாடலடி 13 முதல் 31
    ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
    கலித்தொகைநல்லந்துவனார்புலப்படவில்லை5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
    குறுந்தொகைபூரிக்கோபூரிக்கோபாடலடி 3 முதல் 8
    நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதிபாடலடி 9 முதல் 12
    பதிற்றுப்பத்துதெரியவில்லைதெரியவில்லைஅரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
    பரிபாடல் (பரிபாட்டு)தெரியவில்லைதெரியவில்லைதிருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
    புறநானூறு (புறம்)தெரியவில்லைதெரியவில்லைபுறத்திணைப் பாடல்கள்



    ஐங்குறுநூறு


    குன்றக் குறவன் காதல் மடமகள்
    வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்
    ஐயள் அரும்பிய முலையள்
    செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.
    ஐங்குறுநூறு - 255.
    புறநானூறு
    யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
    தீதும் நன்றும் பிறர்தர வாரா,
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
    இன்னாது என்றலும் இலமே, பின்னொடு
    வானம் தண் துளி தலைஇ ஆனாது
    கல் பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
    காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
    (கணியன் பூங்குன்றன், புற நானூறு, 192).

    "இனி நினைந்து இரக்கம் ஆகின்று! திணிமணல்
    செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
    தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
    உயர்சினை மருதத் துறை உறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிரக்
    குளித்து மணல் கொண்ட கல்லா இளமை!
    அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ,
    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெரு மூதாளரோம் ஆகிய எமக்கே?"
    (தொடித்தலை விழுத்தண்டினார், புற நானூறு, 243 )





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக