திங்கள், 24 ஜனவரி, 2011


அகத்தியம்

அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி,இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.


அகத்தியரின் மாணவர்கள்

  1. செம்பூண்சேய்
  2. வையாபிகன்
  3. அதங்கோட்டாசான்
  4. அபிநயனன்
  5. காக்கை பாடினி
  6. தொல்காப்பியர்
  7. வையாபிகன்
  8. பனம்பாரனார்
  9. கழாகரம்பர்
  10. நத்தத்தன்
  11. வாமனன்
  12. துராலிங்கன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக