தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.
குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
குறில் | நெடில் | |||||
---|---|---|---|---|---|---|
முன் | நடு | பின் | முன் | நடு | பின் | |
அண்மை | i | u | iː | uː | ||
இ | உ | ஈ | ஊ | |||
இடை | e | o | eː | oː | ||
எ | ஒ | ஏ | ஓ | |||
திறந்த | a | (ai) | aː | (aw) | ||
அ | ஐ | ஆ | ஒள |
மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
- வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.
இதழ் | பல் | நுனியண்ணம் | வளைநா | இடையண்ணம் | கடையண்ணம் | |
---|---|---|---|---|---|---|
வெடிப்பு | p (b) | t̪ (d̪) | ʈ (ɖ) | tʃ (dʒ) | k (g) | |
ப | த | ட | ச | க | ||
மூக்கு | m | n̪ | ṉ | ɳ | ɲ | ŋ |
ம | ந | ன | ண | ஞ | ங | |
உருட்டு | ɾ̪ | r | ||||
ர | ற | |||||
மருங்கு | l̪ | ɭ | ||||
ல | ள | |||||
உயிர்ப்போலி | ʋ | ɻ | j | |||
வ | ழ | ய |
சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து
ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.
. | க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
அ | க | ங | ச | ஞ | ட | ண | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன |
ஆ | கா | ஙா | சா | ஞா | டா | ணா | தா | நா | பா | மா | யா | ரா | லா | வா | ழா | ளா | றா | னா |
இ | கி | ஙி | சி | ஞி | டி | ணி | தி | நி | பி | மி | யி | ரி | லி | வி | ழி | ளி | றி | னி |
ஈ | கீ | ஙீ | சீ | ஞீ | டீ | ணீ | தீ | நீ | பீ | மீ | யீ | ரீ | லீ | வீ | ழீ | ளீ | றீ | னீ |
உ | கு | ஙு | சு | ஞு | டு | ணு | து | நு | பு | மு | யு | ரு | லு | வு | ழு | ளு | று | னு |
ஊ | கூ | ஙூ | சூ | ஞூ | டூ | ணூ | தூ | நூ | பூ | மூ | யூ | ரூ | லூ | வூ | ழூ | ளூ | றூ | னூ |
எ | கெ | ஙெ | செ | ஞெ | டெ | ணெ | தெ | நெ | பெ | மெ | யெ | ரெ | லெ | வெ | ழெ | ளெ | றெ | னெ |
ஏ | கே | ஙே | சே | ஞே | டே | ணே | தே | நே | பே | மே | யே | ரே | லே | வே | ழே | ளே | றே | னே |
ஐ | கை | ஙை | சை | ஞை | டை | ணை | தை | நை | பை | மை | யை | ரை | லை | வை | ழை | ளை | றை | னை |
ஒ | கொ | ஙொ | சொ | ஞொ | டொ | ணொ | தொ | நொ | பொ | மொ | யொ | ரொ | லொ | வொ | ழொ | ளொ | றொ | னொ |
ஓ | கோ | ஙோ | சோ | ஞோ | டோ | ணோ | தோ | நோ | போ | மோ | யோ | ரோ | லோ | வோ | ழோ | ளோ | றோ | னோ |
ஒள | கௌ | ஙௌ | சௌ | ஞௌ | டௌ | ணௌ | தௌ | நை | பௌ | மௌ | யௌ | ரௌ | லௌ | வௌ | ழௌ | ளௌ | றௌ | னௌ |
ஃ |
கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரிஎழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ joo, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j
ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shoo, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh
ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Soo, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S
ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ hoo, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h
க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshoo, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக