திங்கள், 21 பிப்ரவரி, 2011


கடவுள்
கே.சித்ரா
         மறுக்க முடிந்தவர்களுக்கு நாத்திகம்
         உணர முடிந்தவர்களுக்கு ஆத்திகம்
         இடை பட்டவர்களுக்கு சௌகரியம்!
   













காதலர்களின் வருகைக்காக!
     கா.ந.கல்யாணசுந்தரம்
         இது இலையுதிர்காலம் என்றாலும்
         இருக்கை மட்டும் காத்திருக்கிறது...
         காதலர்களின் வருகைக்காக!
கவனச்சிதறல்
பூர்ணசெல்வி
         என்னைத் தெரியவில்லையா,
         உனக்கானவளின் கவனச்சிதறல்.....
         தரையில் கிடந்த மலர்க
எரியும் இதயம்
பாத்திமா
         பூங்காவில் மாமிச நாற்றம்
         காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்
         ஏதோ ஓர் இதயம் எரிகிறதென்று
காதல் மட்டும்
கூடல்
         காமம் சுமந்து காதலிப்பவர்கள் மத்தியில்
         நான் காதல் மட்டும் சுமந்தபடி
         உன்னை காதலிக்கிறேன்
காதலர்களின் கருவறையாய்....
மணிகண்டன் மகாலிங்கம்
         எத்தனையோ
         காதலர்களை சுமந்த
         காதலர்களின் கருவறையாய்
         பேருந்துகள்....
சுமை
தினேஷ் ராஜ்
         எழுதப்படாத காவியம்                           
         என் சொல்லப்படாத காதல்

         சிகரெட்

            இரா.ரவி
                 எனக்கு நானே
                 எரிக்கும் உடன்கட்டை,
                      சிகரெட் ...        

நினைவுகள்
நிலவினி
         விழிக்க மறந்த
         என் கனவுகளில்........
         அழிக்க  மறந்த
         உன்  நினைவுகள்....!
     வரம்
      பா.விஜயமுருகன், காரையூர்

         விரல் பிடித்து
         நடந்திட
         வரம் கிடைத்தது...
         தாய்க்குப்பின்
         'காதலி'



காதலியே...!

வித்யாசாகர்
பிடிக்கவில்லை என
ஒரு முறை
சொல்லியாவது விடு;
நீ பேசியதை -
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!


    ஒற்றை ரோஜா

      பிரியா பாரதி
      தரை தொடாத
      விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
      அவள் கூந்தலில்
      ஒற்றைரோஜா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக